நடிகர் சிம்பு திடீர் கிரிவலம் - விகடன்

திருவண்ணாமலை: ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு நடிகர் சிம்பு திடீர் விசிட் அடித்து யாருக்கும் தெரியாமல் கிரிவலம் வந்து சென்றுள்ளார். நடிகர் சிம்பு திருவண்ணாமலைக்கு இன்று அதிகாலை வந்தவர் யாருக்கும் தெரியாமல் சிரிப்பு நடிகர் மயில்சாமியுடன் காரில் கிரிவலம் வந்துள்ளார். கிரிவலம் வரும்போது அண்ணாமலை மீது ஒரு பாறையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்துள்ளார். 

அதன்பின் திரும்பவும் காரில் ஏறி கிரிவலம் வந்துள்ளார். கிரிவலம் முடித்ததும் நேராக அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு உடனே காரிலேயே சென்னைக்கு சென்றுள்ளார். யாருக்கும் தெரியாமல் நடிகர் சிம்பு திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்றுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : Vikatan

CONTACT ADMIN : youngthala@gmail.com