ரயில்களை வாடகைக்கு எடுத்து வாலு சண்டைக்காட்சி - Dinakaran


சென்னை : மூன்று ரயில்களை வாடகைக்கு எடுத்து ‘வாலு’ படத்தில் சண்டைக்காட்சி எடுக்கப்பட இருப்பதாக இயக்குனர் விஜய் சந்தர் சொன்னார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிக்கும் படம், ‘வாலு’. இதன் ஷூட்டிங் அடுத்த வாரம் ஐதராபாத்தில் நடக்க இருக்கிறது. இதுபற்றி படத்தை இயக்கும் விஜய் சந்தர் கூறியதாவது: 

 படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஐதராபாத்தில் பிரமாண்ட சண்டைக்காட்சியை எடுக்க இருக்கிறோம். இந்தக் காட்சியில் சிம்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதற்காக பிரமாண்ட ரயில்வே ஸ்டேஷன் செட் போடப்படுகிறது. இரண்டு பயணிகள் ரயிலையும் ஒரு கூட்ஸ் ரயிலையும் வாடகைக்கு எடுத்து ஷூட்டிங் நடத்த இருக்கிறோம். 

திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சியை அமைக்கிறார். படத்தில் இந்த சண்டைக்காட்சி ஹைலைட்டாக இருக்கும். இவ்வாறு விஜய்சந்தர் கூறினார்.Published In DINAKARAN Daily Tamil News Paper Dated 11-MAY-2013
CONTACT ADMIN : youngthala@gmail.com