Inga Enna Solludhu Shooting In London

தயாரிப்பாளரா இருந்து காமெடி நடிகரான பெருங்குரல் வேந்தன் வி.டி.வி கணேஷ் ஹீரோவாக புரமோஷன் ஆகியிருக்கும் படம் இங்க என்ன சொல்லுது. இங்கங்றது இதயத்தை குறிக்குதாம். அவருக்கு ஜோடியாக நடிக்கிறவர் அவரு மாநிலத்தைச் சேர்ந்த மீரா ஜாஸ்மின். சந்தானம் காமெடி ஹீரோ. சிம்பு கெஸ்ட் ரோல் பண்ணுகிறார். இப்போது ஒட்டு மொத்த டீமும் லண்டனில் இருக்கிறது. லண்டன் நகர தெருக்களில்தான் படத்தோட கிளைமாக்ஸ் நடக்குதாம். இதுக்காக லண்டனில் உள்ள தமிழ் மகாஜனங்களை கூட்டி அவர்களையும் நடிக்க வச்சு கிளைமாக்ஸ் எடுக்குறாங்க. சிம்பு லண்டன்ல உள்ள ஒரு பிரமாண்ட ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் ஒரு பாட்டை பாடிக்கிட்டிருக்கார். அடுத்த வாரம் டீம் சென்னை திரும்புது. அடுத்த மாதம் ரிலீஸ் பண்ண பிளான் பண்ணியிருக்காங்க.
Source : Dinamalar


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com