Pandiraj's Next with STR and His Brother

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடிக்கிறார். அவர் தம்பி குறளரசன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்!

 கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் சிலம்பரசன் ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி பாண்டிராஜிடம் கேட்டபோது கூறியதாவது: எனது அடுத்தப் படத்தில் சிலம்பரசன் நடிப்பது உண்மைதான். இந்தப் படம் கவித்துவமான காதல் கதையை கொண்டது. எனது மற்ற படங்களை போல காமெடிக்கும் முக்கியத்துவம் இருக்கும். மற்ற டெக்னீஷியன்கள் தேர்வு நடந்துவருகிறது. சிம்பு சினி ஆர்ட்ஸும் எனது பசங்க புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கிறது. சிலம்பரசனின் தம்பி குறளரசன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். அவர் இசை அமைத்த சில டியூன்களை போட்டுக் காட்டினார். அவ்வளவு சிறப்பாக இருக்கிறது. முக்கியமான இசை அமைப்பாளராக அவர் வருவார்.இவ்வாறு பாண்டிராஜ் கூறினார்.  


Published In DINAKARAN Daily Tamil News Paper Dated 11-JULY-2013


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com