ஜோக் சொன்ன தனுஷ் - குலுங்கிச் சிரித்த சிம்பு

ரசிகர்கள் என்னதான் சண்டை போட்டுக்கொண்டாலும், தாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என்பதை மீண்டும் ஒருமுறை தனுஷும், சிம்புவும் நிரூபித்துள்ளனர். 

இசை அமைப்பாளர் அனிருத்துடன் இந்திய சினிமா நூற்றாண்டு தொடக்க விழாவுக்கு வந்தார் தனுஷ். அப்போது தான் சிம்புவும் அரங்கத்துக்குள் நுழைந்தார். இருவரும் சிரித்தபடியே கைகுலுக்கிக் கொண்டனர். 

உட்கார இடம் தேடியபோது, இரண்டு இருக்கைகள் மட்டுமே இருக்க, அவற்றில் சிம்புவும், தனுஷும் அமர்ந்தனர். பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தார் அனிருத். 

தனுஷ் - சிம்பு இருவரும் இடைவிடாமல் ஏதோ பேசிக்கொண்டே இருந்தனர். தனுஷ் ஏதோ ஜோக் சொல்ல, அதைக்கேட்டு குலுங்கி குலுங்கிச் சிரித்தார் சிம்பு. சிறிது நேரம் கழித்து, அனிருத் அமர்ந்திருந்த இருக்கையை முன்னால் இழுத்துப்போட்டு, அனிருத் - சிம்பு இருவருக்கும் இடையே அமர்ந்து கொண்டார் தனுஷ். 
Source : VIKATAN
CONTACT ADMIN : youngthala@gmail.com