பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாரா–சிம்பு திருமண காட்சி


பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாரா– சிம்பு திருமண காட்சி இடம் பெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

ஏற்கனவே ராஜா ராணி படத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஆர்யாவும், நயன்தாராவும் திருமணம் செய்வது போல் காட்சி வைக்கப்பட்டது. அதை போஸ்டராக அச்சிட்டு வெளியிட்டும் படத்துக்கு விளம்பரம் தேடினர். அது போல் இந்த படத்தில் காட்சி வைக்கிறார்கள். 

சிம்புவும், நயன்தாராவும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வது போல் இக்காட்சியை எடுக்கப் போகிறார்களாம். இந்து கோவில் ஒன்றில் இதை பட மாக்க உள்ளனர். செட் போட்டு எடுக்கலாமா அல்லது நிஜ கோவிலிலேயே படமாக்கலாமா என்று பரிசீலனை நடக்கிறது. 

 சிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். அடுத்து நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. திருமணம் வரை வந்தார்கள். கடைசியில் இதுவும் முறிந்து போனது. தற்போது நயன்தாரா, சினிமாவில் பிசியாக நடிக்க துவங்கியுள்ளார். அஜீத்துடன் நடித்த ஆரம்பம், ஆர்யாவுடன் நடித்த ராஜா ராணி படங்கள் வெற்றிகரமாக ஓடின. அடுத்த மாதம் உதயநிதி ஜோடியாக நடித்த இது கதிர்வேலன் காதல் படம் வருகிறது.

Published In MAALAIMALAR Daily Evening Tamil News Paper Dated 27-January-2014
CONTACT ADMIN : youngthala@gmail.com