சினிமா தொழிலாளர்களுக்காக சிம்பு பாடிய பாடல்

பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த ‘அம்முவாகிய நான்’ படத்தை இயக்கிய பத்மா மகன் இயக்கும் புதிய படம் ‘நேற்று இன்று’. இதில் விமல், ரிச்சர்ட், நிதிஷ், பரணி, ஹரிஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். நந்தகி அருந்ததி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் பிரசன்னாவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

பல கோணங்களில் நடக்கும் கதையை மாறுபட்ட திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பத்மாமகன். இப்படம் குறித்து அவர் கூறும்போது,

எதிர்பாராத சம்பவங்களும், திருப்பங்களும் நிறைந்த இத்திரைக்கதை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடக்கும் பயணத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. காட்சிகளை தத்ரூபமாக படமாக்குவதற்காக கடும் சிரத்தை மேற்கொண்டு ஆள் அரவமற்ற சூரிய வெளிச்சம்கூட உட்புக முடியாத அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்று காட்சிகளை படமாக்கியுள்ளோம் என்று கூறினார்.

மேலும், இத்திரைப்படத்தில் சினிமாவை மட்டும் நம்பி வாழும் சினிமா தொழிலாளர்களையும் அதற்காக அவர்கள் படும் கஷ்டங்களையும் வாழ்க்கை சூழலையும் பற்றி ஒரு பாடல் வருகிறது. இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். பாடியதோடு மட்டுமல்லாமல் இப்பாடலுக்கு நடித்தும் கொடுத்துள்ளார்.

26699 சினிமா சார்பில் எஸ்.மாலதி இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். கேரளா, தலக்கோணம், சென்னை, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. எஸ்.தணிகைவேல் வழங்கும் இத்திரைப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

Source : Maalaimalar,21-MAY-2014

Netru Indru Movie Promo Song Video
CONTACT ADMIN : youngthala@gmail.com