ஹன்சிகா காதல் முறிவால் கவலைப்படவில்லை : சிம்பு பேட்டி


சிம்பு ‘இது நம்ம ஆளு’ படத்தில் பிசியாக நடிக்கிறார். டிசம்பரில் இப்படம் ரிலீசாகிறது. ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்களும் கைவசம் உள்ளன. இந்நிலையில் சிம்பு அளித்த பேட்டி விவரம் வருமாறு:– 

கேள்வி:– ‘இது நம்ம ஆளு’ திருப்புமுனை படமாக இருக்குமா? 
பதில்:– என் ரசிகர்கள் படங்களை பொறுமையாக காத்திருந்து பார்க்கிறார்கள். அவர்களுக்காகத்தான் தொடர்ந்து படங்களில் நடிக்க விரும்புகிறேன். அடுத்த வருடம் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. என் படங்கள் பற்றி கேட்டால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் மனநிலை வேறு மாதிரி இருக்கிறது. ‘இது நம்ம ஆளு’, ‘வாலு’, போன்ற படங்களில் என் வேலை எதுவோ அதை செய்து இருக்கிறேன். ரசிகர்களுக்கு பிடிக்கும். 

கேள்வி:– உங்கள் படங்கள் தாமதமாவது ஏன்? 
பதில்:– இருவருட இடைவெளி என்பது எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. இந்த இரு வருடங்களில் நான்கு படங்களை முடித்து விட்டேன். இந்த படங்கள் தவறான இடத்தில் சிக்கிக் கொண்டு உள்ளது. பல்வேறு காரணங்களால் அவை முடங்கியுள்ளன. விரைவில் இவை ஒவ்வொன்றாக வெளிவரும். வாலு சீக்கிரம் வரும். 

கேள்வி:– நயன்தாரா, தனுஷ், போன்றோருடன் பார்ட்டிகளுக்கு போகிறீர்களே? ப:– நயன்தாராவை பார்ட்டியில் சந்தித்தேன். பேசிக்கொண்டோம். படப்பிடிப்பிலும், பொது நிகழ்ச்சிகளில் பார்க்கும்போதும் பேசிக்கொண்டோம். அதற்கு மேல் எதுவும் இல்லை. இதுபோல் தனுசையும் சந்திக்கிறேன். எங்களுக்குள் சண்டை மூட்டிவிட்டு குளிர்காய சிலர் நினைத்தனர். அது நடக்கவில்லை. 

கேள்வி:– ஹன்சிகாவுடன் காதல் என்றீர்கள். பிறகு பிரிந்து விட்டோம் என்கிறீர்கள். என்ன நடந்தது? 
பதில்:– காதல் விஷயங்களில் எப்போதுமே நான் வெளிப்படையாகத்தான் இருந்து இருக்கிறேன். யாரேனும் எதுவும் சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் இருக்க விரும்பாததால் முறிவு பற்றி வெளிப்படையாக சொன்னேன். யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். ஆனால் திருமணம் என்று வரும்போது சில விஷயங்கள் பற்றி யோசிக்க வேண்டியது முக்கியம். என்ன பிரச்சினைகள் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. எனவே இருவரும் பேசி பிரிவது என்று முடிவு எடுத்தோம். எனக்கு தெரிந்த பலர் இதுபோல் காதல் முறிவு ஏற்பட்டபோது அழுது இருக்கிறார்கள். எனக்கு ஏற்கனவே இதுபோல் முறிவுகள் ஏற்பட்டபோது மனஅழுத்தம் ஏற்பட்டது. அதில் இருந்து வெளிவர நீண்டதூரம் பயணம் செய்து இருக்கிறேன். ஆனால் ஹன்சிகாவுடனான காதல் முறிவுக்கு பிறகு சாதாரணமாகவே இருந்தேன். எனக்குள் பக்குவம் ஏற்பட்டு இருந்தது. 

கேள்வி:– மீண்டும் காதலிப்பீர்களா? 
பதில்:–அதுபற்றி எனக்கு தெரியாது. இப்போது தனியாக சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். திருமணமான எல்லோரும் சந்தோஷமாகவா இருக்கிறார்கள். இவ்வாறு சிம்பு கூறினார்.

Published in MAALAIMALAR Daily Tamil Evening News Paper Dated 13-sep-2014

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com