சிம்புவுக்காக டப்பிங் பேசிய நயன்தாரா

முதல்முறையாக தமிழில் பின்னணி பேசி நடித்திருக்கிறார் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த நயன்தாரா, ஐயா படம் மூலம் தமிழில் அற¤முகம் ஆனார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கிறார். ஆனால் இதுவரை சொந்த குரலில் டப்பிங் பேசியதில்லை. ஆனால் இப்போது முதல்முறையாக டப்பிங் பேசி நடித்திருக்கிறார். அதுவும் சிம்பு கேட்டுக்கொண்டதால்.

'வல்லவன்' படத்தில் நடித்தபோது நயன்தாரா-சிம்பு இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் நீண்ட நாள் நீடிக்கவில்லை. சீக்கிரமே முடிவுக்கு வந்தது. அதன்பிறகு சிம்புவை சந்திப்பதை நயன்தாரா தவிர்த்து வந்தார். இந்நிலையில் ஒருமுறை ஐதராபாத்தில் சந்தித்த இவர்கள், தங்களது நட்பை புதுப்பித்துக்கொண்டனர். இப்போது இருவரும் சேர்ந்து 'இது நம்ம ஆளு' படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை சிம்புவே தயாரிக்கிறார். அவரது தம்பி குறளரசன் இசையமைக்கிறார். பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்துவிட்டன. 

இதனால் அவரது காட்சிகளுக்கு டப்பிங் முடித்துவிடலாம் என படக்குழு எண்ணியது. அவரே டப்பிங் பேசினால் நன்றாக இருக்கும் என சிம்பு சொன்னாராம். பிறகு நயன்தாராவிடம் அவர் கேட்டதும், மாஜி காதலன் கேட்பதால் அவரால் மறுப்பு சொல்ல முடியவில்லையாம். உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இதையடுத்து அவர் படத்துக்கு டப்பிங் பேசி வருகிறார்.
Published in TAMILMURASU Daily evening Tamil News Paper Dated 12-Jan-2015

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com