என் படத்தை தடுக்குறாங்க - சிம்பு அட்டாக்

'என் படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் தடுக்கிறார்கள். சிலர் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்' என்கிறார் சிம்பு.' இது நம்ம ஆளு' , ' வாலு' என 2 படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வந்தார் சிம்பு. 

வாலு படம் இம்மாதம் 27ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால் படத்தை தள்ளிவைத்துவிட்டனர். ஏப்ரலில் வெளியாகலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மே மாதம்தான் இந்த படம் வெளியாகும் என தெரிகிறது. இதை அறிந்து நொந்து போயிருக்கிறார் சிம்பு.

இது குறித்து டுவிட்டரில் அவர் கூறுகையில், "இப்போது என்னையே நான் இறைவனிடத்தில் கொடுத்துவிட்டேன். தாம் செய்யும் நல்ல காரியங்கள் மீது பிறருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, எனக்கு இருக்கிறது. எனக்கு எதிராக ஒரு சிலர் தொடர்ந்து சதி செய்கிறார்கள். என் மீதான பொறாமை, வெறுப்பு காரணமாகவே இதுபோல் செய்கிறார்கள். ஆனால் அது பற்றி எனக்கு கவலை இல்லை" என்றார்.மனம் உடைந்து சிம்பு இப்படி சொல்லியிருப்பது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மன அமைதிக்காக இமயமலைக்கு அவர் சென்று வந்தார். அதன்பிறகு ஓரளவுக்கு சர்ச்சைகளிலிருந்து அவர் விடுபட்டார். ஆனால் சமீபகாலமாக, அவர் மீண்டும் சர்ச்சை நாயகனாக மாறி வருகிறார். ' திரும்ப நீ இமயமலைக்கு போய் வா' என அவருக்கு நெருக்கமானவர்கள் அட்வைஸ் தந்துள்ளார்களாம்.
Published in TAMILMURASU Daily Evening Tamil News Paper Dated 16-March-2015

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com