சிம்புவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் ?

மே 9ம் தேதி சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் உருவான ‘ வாலு’ அப்டம் வெளியாக இருக்கிறது. கடந்த 2வருட காலமாக மேக்கிங்கிலேயே இருந்துவந்த இப்படத்தில் ரிலீஸ் தேதி மட்டுமே பலமுறை மாற்றப்பட்டு கடைசியாக மே 9 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிம்பு இந்த வருடம் கண்டிப்பாக மூன்று படமேனும் கொடுத்தாக வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறார். அதன்படி பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘இது நம்ம ஆளு’ படமும் முடியும் தருவாயை எட்டியுள்ளது. 

அதேபாணியில் கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இவ்விரண்டு படங்களின் நிறைவை அடுத்து சிம்பு செல்வராகவனின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. 

இது தவிர்த்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் புதிய படமொன்றிலும் சிம்பு நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க லட்சுமி மேனன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர்த்து சக்தி சௌந்தர் ராஜ இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் ஹீரோயினாகவும், அஜித்தின் தல 56 படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் லட்சுமி மேனன். 

Published in NAM NAADU Malaysia Tamil News Paper Dated 25-April-2015

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com