நடிகர் சிம்புவுக்கு ராதிகா அறிவுரை

  'தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து விலகக்கூடாது; அதில் இருந்து கொண்டே போராட வேண்டும்' என, நடிகர் சிம்புவுக்கு, நடிகை ராதிகா அறிவுரை கூறியுள்ளார். சிம்பு, நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக, 'டுவிட்டரில்' கருத்து வெளியிட்டிருந்தார். இதனால், 'தமிழ் நடிகர் சங்கம்' என்ற பெயரில் புதிய சங்கம் உருவாகப்போவதாக தகவல் பரவியது. 'சிம்புவை சங்கத்தில் இருந்து வெளியேற விட மாட்டோம்' என, நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

  'எதுவானாலும் பேசி தீர்ப்போம்' என்ற அவர்கள், ஏப்., 24ல் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில், சிம்பு விவகாரம் குறித்து விவாதிக்க இருக்கின்றனர். இந்த நிலையில், 'நடிகர் சங்கம் அவர்கள் சொத்து அல்ல; அது நம் சங்கம். சங்கத்தில் இருந்து கொண்டே போராட வேண்டும்; உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மூத்த நடிகையின் அறிவுரை இது' என, நடிகை ராதிகா, 'டுவிட்டரில்' சிம்புவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
Published in DINAMALAR Daily Tamil News Paper Dated 22-April-2016

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com