இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம்


சந்தானம் நடித்து வரும் 'சக்கப் போடு.. போடு ராஜா' படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன் என்று சிம்பு தெரிவித்தார். சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்துக்கு 'சக்கப் போடு... போடு ராஜா' என தலைப்பிட்டார்கள். விடிவி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் 'சர்வர் சுந்தரம்' நாயகியான வைபவி ஷாந்தலியா இதிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

ரோபோ சங்கர், சம்பத், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பதில் ரகசியம் படக்குழு ரகசியம் காத்து வந்தது. இப்படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். இது குறித்து சிம்புவிடம் கேட்ட போது, "இசையமைக்க கேட்டார்கள், நானும் கதையைக் கேட்டேன். நன்றாக இருந்தது ஒப்புக் கொண்டேன். சந்தானம் படமின்றி வேறொருவர் படமொன்றால் யோசித்திருக்க வாய்ப்புண்டு. 

எனக்கு ஆரம்பித்தில் இருந்தே இசையின் மீது ஆர்வம் அதிகம் என்பது அனைவருக்குமே தெரியும். ஆகையால் நான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல என நினைக்கிறேன். ஒரு படத்துக்கு இசையமைக்கப் போகிறோமே என்ற பயமெல்லாம் எனக்கு இல்லை. 

என்னுடைய இசைப்பணியை நல்லபடியாக முடித்துக் கொடுக்கிறேன். அதைக் கேட்டுவிட்டு எப்படியிருக்கிறது என்று மக்கள் தீர்மானிக்கட்டும்" என்று தெரிவித்தார் சிம்பு. 

Source : HINDU (TAMIL)

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com