தாத்தா கதாபாத்திரத்தில் சிம்பு


இளவட்ட காதல் கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிம்பு திடீரென்று தாத்தா கதாபாத்திரத்துக்கு மாறியிருக்கிறார். நரைத்த தலைமுடி, நரைத்த மீசை சகிதமாக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் அஸ்வின் தாத்தாவாக நடிக்கிறார். இந்த கதாபாத்திரம் தவிர மேலும் 2 பாத்திரங்களில் இதில் அவர் நடிக்கிறார். சிம்புவின் போட்டியாளர் தனுஷ், பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராகி உள்ளார். இதில் பாண்டி தாத்தா என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார். அந்த வேடத்தை ராஜ்கிரண் ஏற்று நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்கு போட்டியாக அஸ்வின் தாத்தாவாக களம் இறங்கியிருக்கிறாராம் சிம்பு. தனுஷ், சிம்புவின் ருசிகரமான இந்த மோதல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சினிமாவில் சிம்பு தாத்தா வேடம் ஏற்ற அதேநேரம் டி.ராஜேந்தர் நிஜமாகவே தாத்தா ஆகியிருக்கிறார். டி.ஆர் மகள் தமிழ் இலக்கியாவிற்கும், ஐதராபாத்தை சேர்ந்த அபிலாஷுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இலக்கியாவுக்கு நேற்றுமுன்தினம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பேரன் பிறந்த மகிழ்ச்சியையும், தாத்தாவான சந்தோஷத்தையும் மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார் டி.ராஜேந்தர். தாத்தாவாக இருந்தாலும் கவண் படத்தில் அதிரடி பாத்திரத்தில் ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார் டி.ஆர். 

Published in TAMILMURASU Daily Evening Tamil News Paper Dated 24/3/2017

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com