ஹன்சிகாவை புகழ்ந்து சிம்பு பாடல்

சிம்புவின் ‘வாலு’ படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து பாடும் பாடல் இடம் பெறுகிறது. இந்த பாடலில் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்ட நயன்தாரா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பெயர்களும் வருகின்றன. 

‘வாலு’ படத்தில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்தனர். தற்போது சிம்பு ஜோடியாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த நிலையில் ‘வாலு’ படத்துக்காக புதிய பாடல் ஒன்று உருவாகியுள்ளது. சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3–ந் தேதி இந்த பாடல் வெளியாகிறது. 

ஹன்சிகாவை பார்த்து சிம்பு பாடுவது போல் இப்பாடலை உருவாக்கியுள்ளனர். ‘நயன்தாரா வேண்டாம் ஆண்ட்ரியா வேண்டாம் யூ ஆர் மை டார்லிங்’ என்ற வரிகள் இந்த பாடலில் உள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மணிரத்னம், பாலா, ஷங்கர் உள்ளிட்ட டைரக்டர்கள் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளதாம். இதன் பல்லவி ‘இங்கி பிங்கி பாங்கி’ என துவங்குகிறது. இந்த பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல் எழுதி உள்ளார். ‘சிம்பு பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு இந்த பாடல் பெரிய விருந்தாக இருக்கும்’ என்றார் தமன். 
Published In MAALAIMALAR Daily English News Paper Dated 20-January-2013
CONTACT ADMIN : youngthala@gmail.com