சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு திருமணம்


பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பு, கெளதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார் சிம்பு. இந்நிலையில் சிம்பு வீட்டில் விரைவில் மேளச்சத்தம் கேட்க உள்ளது. அவருடைய தங்கை இலக்கியாவுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் 10ம் தேதி திருமணம் வெகு விமரிசையாக நடக்க உள்ளதாம்.

திருமண ஏற்பாடுகளை டி.ராஜேந்தரும், மனைவி உஷா ராஜேந்தரும் செய்து வருகிறார்கள். தற்போது குடும்பத்தினருடன் பழனி முருகனை தரிசிக்க சென்றுள்ள இயக்குனர் டி.ராஜேந்தர் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை நாளை அறிவிக்க உள்ளார். 

தங்கையின் திருமணம் முடிந்தபிறகு தன்னுடைய திருமணம் என்று சிம்பு ஏற்கெனவே கூறியிருந்தார். எனவே, தங்கையின் திருமணம் நடந்து முடிந்த சில மாதங்களிலேயே சிம்புவிற்கும் திருமணம் நடத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
Source : Dinamani
CONTACT ADMIN : youngthala@gmail.com