சிம்பு தங்கைக்கு கல்யாணம்

இயக்குனர் டி.ராஜேந்தர், உஷாவுக்கு சிம்பு, குறளரசன் என 2 மகன்கள், இலக்கியா என்ற மகளும் உள்ளனர். தந்தைபோல் சிம்பு நடித்து வருகிறார். குறளரசன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இலக்கியா எம்.பி.ஏ. படித்து வந்தார். சிம்புவிடம் அவ்வப்போது அவரது திருமணம் பற்றி நிருபர்கள் கேட்டபோது, ‘தங்கை இலக்கியா வுக்கு திருமணம் முடிந்த பிறகே திருமணம் செய்வேன்‘ என்று கூறிவந்தார்.

இந்நிலையில் இலக்கி யாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்ற பி.டெக் பட்டதாரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 10ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடக்கிறது. அன்று மாலை அதே இடத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டி.ராஜேந்தர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
Published In TAMILMURASU Daily Evening News Paper Dated 28-January-2014
CONTACT ADMIN : youngthala@gmail.com