ஒரே நேரத்தில் சிம்பு, தனுஷ் படப்பிடிப்பு


சென்னை, ஏப். 7: சிம்பு நடிக்கும், ‘அச்சம் என்பது மடமையடா’, தனுஷ் நடிக்கும், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படங்களின் படப்பிடிப்பு துருக்கியில் ஒரே நேரத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக தனுஷ், சிம்பு ஆகியோர் தனித் தனியாக துருக்கி செல்கின்றனர். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ‘அச்சம் என்பது மடமையடா’. அவர் ஜோடி யாக மலை யாள நடிகை மஞ்சிமா மோகன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்தப் படத் துக் கான பாடல் காட்சியை துருக்கியில் படமாக்குகிறார், கவுதம் வாசுதேவ் மேனன். 

இதற்காக சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் படக்குழுவினர் சனிக்கிழமை அதி காலை துருக்கி செல்கின்றனர். இதற்கிடையே தனுஷ், ராணா, மேகா ஆகாஷ் நடிக்கும், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத் தை யும் கவுதம் வாசு தேவ் மேனன் இயக்கி வருகிறார். இந்தப் படத் தின் சில காட்சிகள் துருக்கியில் பட மாக்கப்படுகிறது. அதற்காக தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோர் இன்று துருக்கி செல்கின்றனர். இயக்குனர் கவு தம் வாசு தேவ் மேனன் ஏற்கனவே துருக்கி சென் று விட்டார் என்று படக்குழுத் தெரிவித்தது. 

Published in DINAKARAN Daily Tamil News Paper Dated 7-APRIL-2016

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com