என்னையும் கைது செய்யுங்கள்: நடிகர் சிம்புஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட என்னையும் கைது செய்யுங்கள் என நடிகர் சிம்பு கூறியுள்ளார். 

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இது தொடர்பாக காவலர்கள் பலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் சிம்பு இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜல்லிக்கட்டு சட்டத்தை பற்றி முழுமையாக விளக்கியிருந்தால் வன்முறை நடைபெற்றிருக்காது. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாட முடியாமல் போனது வேதனை அளிக்கிறது. மாணவர்களை காப்பாற்றவே மீனவர்கள் ஓடி வந்தனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 

போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை தேச விரோதிகளாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் இல்லையென்றால் அவர்களுக்காக போராடுவேன் எனக் கூறினார்.

Source : Puthiyathalaimurai.com

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com