மகனுக்காக களமிறங்கும் சிம்புவின் அம்மா

சந்தானம் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு சிம்பு இசையமைத்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தே. நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக அவதாரம் எடுத்த சிம்பு, இசையமைப்பாளராக அறிமுகமாவது இந்த படத்தில்தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய இசையில் இந்த படத்திற்காக சிம்பு 5 பாடல்களை அமைத்துள்ளார். அதில் ஒரு பாடலை அனிருத் பாடியுள்ளார். சந்தானம் படத்தில் அறிமுகமாகும் பாடலைத்தான் அனிருத் பாடியுள்ளார். அதைத் தொடர்ந்து யுவன் ‘காதல் தேவதை’ என தொடங்கும் ஒரு பாடலை பாடியுள்ளார். பிரபல பின்னணி இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸும் ஒரு பாடலை பாடியுள்ளார்.
 மேலும், இரண்டு பாடகர்களையும் சிம்பு இந்த படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணன் மற்றும் கீர்த்தனா ஆகிய இரண்டு பேரையும் இந்த படத்தில் தனித்தனி பாடல்களாக பாடவைத்துள்ளார்.

இதில் ஹைலைட்டாக தனது பெற்றோரான டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் ஆகியோரையும் இப்படத்தில் பாட வைத்துள்ளார். ‘வா முனிமா வா’ என தொடங்கும் பாடலை இருவரும் சேர்ந்து பாடியுள்ளார். டி.ராஜேந்தர் ஏற்கெனவே பல படங்களில் பாடல்கள் பாடியிருந்தாலும், உஷா டி.ராஜேந்தர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாடல் பாடியுள்ளார். அவர் ஏற்கெனவே ‘தாய் தங்கை பாசம்’ படத்தில் ‘உட்டாலக்கடி அம்மா’ என்ற பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published in MAALAIMALAR Daily Evening Tamil News Paper Dated 11-3-2017

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com