ஒஸ்தி - பத்திரிக்கையாளர் சந்திப்பு

சிம்பு, ரிச்சா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ஒஸ்தி. இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றாலும் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

அவ்விழாவில் சிம்பு, இயக்குனர் தரணி, ஒளிப்பதிவாளர் கோபிநாத், இசையமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மிகவும் காலதாமதாக ஆரம்பமானதால் தங்களது பேச்சில் அனைவருமே அதற்கு வருத்தம் தெரிவித்தனர்.

விழாவில் இயக்குனர் தரணி பேசியது " ஒரு நாள் சிம்பு போன் செய்து நான் 'டபாங்' படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறேன். நீங்கள் தான் இயக்கித் தர வேண்டும் என கூறினார். நான் ஏற்கனவே டபாங் படத்தினை ரீமேக் செய்யும் நோக்கம் ஏதும் இல்லாமல் பார்த்து இருக்கிறேன்.

உடனே நான் சிம்புவிடம் எனக்கு ஒரு 2 வாரம் அவகாசம் வேண்டும். முதலில் நான் இப்படத்தினை தமிழில் பண்ண முடியுமா என்பதை நான் தீர்மானிக்க வேண்டும். பிறகு உட்கார்ந்து ரீமேக் செய்யும் நோக்கத்தில் படத்தினை திருப்பி பார்த்தேன். ROBIN HOOD CHULBUL PANDEY வாக நடித்து இருந்த பாத்திரத்திற்கு சிம்பு என தீர்மானித்து சிந்தித்தேன்.

உடனே கதையில் சிறு சிறு மாற்றங்கள் செய்து அவரை ஒஸ்தி வேலன் ஆக மாற்றி இருக்கிறேன். இப்படத்தினை இவ்வளவு சீக்கிரம் முடிப்பதற்கு முதல் முதல் காரணம் தயாரிப்பாளர் தான். மைசூரில் சுமார் 87 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி முடித்து இருக்கிறோம். ஒரு ஷெட்டியூலில் படத்தினை முடித்து இருக்கிறோம். அதற்காக படத்தின் பட்ஜெட் குறைவு தான் என நினைக்க வேண்டாம். பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறோம்.

87 நாட்களூம் இரவு பகலாக உழைத்து இருக்கிறோம். இடையில் தயாரிப்பாளர் போன் செய்து " சார் 54 நாட்கள் ஷுட்டிங் நடத்தி இருக்கிறீர்கள். ஒரு நாளாவது ரெஸ்ட் விடுங்கள் " என்று கூறினார். உடனே ஒரு நாள் ரெஸ்ட் கொடுத்தோம்.
இப்படத்திற்காக அனைவருமே இரவு பகல் பாராது உழைத்து இருக்கிறோம். படத்திற்கு வந்து விசில் அடித்து ஆர்ப்பரிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் ஒஸ்தியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை " என்று கூறினார்.

சிம்பு பேசியது " முதலில் ஒரு விஷயத்தில் கோபமாகவும், ஒரு விஷயத்தில் சந்தோஷமாகவும் இருக்கிறேன். நாங்கள் இந்த படம் ஆரம்பித்த உடன் தரணியிடம் " க்ளைமாக்ஸில் சல்மான்கான் சட்டை எல்லாம் கழட்டி சண்டை போட்டு இருப்பாரே என்ன செய்வது" என்று கேட்டேன். உடனே அது எல்லாம் நான் பாத்துகிறேன் நீ வா " என்று ஷுட்டிங் போய்விட்டோம்.

அதற்குள் இங்கு உள்ள பத்திரிக்கையாளர்கள் படத்திற்காக சிம்பு 6 பேக் வைக்க இருக்கிறார் என்று எழுதி பரபரப்பு உண்டாக்கி விட்டார்கள். ஆனால் அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை. அதற்குள் எனது ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி பரவ ஆரம்பித்தது.

உடனே நிறைய பேர் என்னிடம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நான் பயங்கர டென்ஷனாகி விட்டேன். என்னடா இது எல்லாரும் கேட்க ஆரம்பித்து விட்டார்களே என்று நினைத்தேன்... உடனே சரி வைக்கலாம் என்று நினைத்தேன். காலை 31/2 மணி நேரம் இரவு 31/2 நேரம் ஜிம்மில் WORKOUT செய்தேன். இப்போது நான் இந்த அளவிற்கு எனது உடம்பை ஃபிட்டாக வைத்து இருக்கிறேன் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம் அதற்கு நன்றி.

இப்படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்த உடன் எனது மனதிற்குள் தோன்றிய முதல் பெயர் தரணி மட்டுமே. வேட்டை மன்னன், போடா போடி என முந்தைய படங்களில் நடிக்க வேண்டியது இருந்தாலும் இப்படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். ஒரே ஷெட்டியூலில் 87 நாட்களில் முடித்து இருக்கிறோம். முழுப்படமும் மைசூரில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

படம் துவங்கும் போதே படம் கண்டிப்பாக வெளிவர ஒன்றரை வருடம் ஆகும். சிம்பு அவ்வளவும் ஈசியாக எந்த ஒரு படத்தையும் முடிக்க மாட்டார் என்று பேச்சுக்கள் நிலவியது. அதை எல்லாம் மீறி இந்த படம் இவ்வளவும் வேகமாக முடிய காரணம் தயாரிப்பாளர் ரமேஷ் மற்றும் இயக்குனர் தரணி மட்டுமே. படக்குழுவினர் அனைவருமே என்னை ஒரு பிள்ளைப் போல பார்த்து கொண்டனர். எப்போதும் ஜாலியாக ஒன்றாகவே இருப்போம்.

கண்டிப்பாக எனது திரையுலக வாழ்வில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமைவதில் எவ்வித சந்தேகமும் இல்லை " என்று தெரிவித்தார்

source : VIKATAN

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com