நான் கண்ணாடி மாதிரி. எதை காட்டுகிறாயோ அதைத்தான் திருப்பி காட்டுவேன்


ARTICLE IN TEXT FORMAT :

‘ஒஸ்தி’ படம் பற்றி சிம்பு கூறியது: இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் நடிக்கிறார் சிம்பு என்ற செய்தியை படித்துவிட்டு ரசிகர்கள் கேட்டார்கள். தூக்கம், சாப்பாடு இல்லாமல் உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வரவழைத்தேன். ‘சிம்பு லேட்டாக வருவான், ஷூட்டிங் முடித்து தரமாட்டான், படம் முடிக்க ஒன்றரை வருடம் ஆகும்’ என்று சிலர் கூறினார்கள்.

ஒருநாள் கூட நிறுத்தாமல் ஷூட்டிங் தொடர்ந்து படம் முடிந்திருக்கிறது. என் படத்தில் பாடலுக்கு முக்கியத்துவம் தருவேன். இயக்குனர் தரணியும் அப்படித்தான். இதனால் இசை அமைப்பாளர் தமனை இரவு, பகல் பாராமல் ட்யூனை மாற்றி மாற்றி கேட்டு டார்ச்சர் செய்து பாடல்கள் வாங்கினோம். என் படத்துக்கு தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார்.

இருவரும் பிரிந்து ஒரு படம் செய்யலாம் என்றேன். உடனே ஒப்புக்கொண்டு இசை அமைப்பாளர் தமன் பெயரை பரிந்துரை செய்தார். ‘நான் கண்ணாடி மாதிரி. எதை காட்டுகிறாயோ அதைத்தான் திருப்பி காட்டுவேன்’ என்ற வசனம் படத்தில் வரும். சிறுவயது முதலே எனது குணமும் இதுதான். என்னிடம் எப்படி நடக்கிறார்களோ அதைத்தான் திருப்பி கொடுத்திருக்கிறேன்.

SOURCE : TAMIL MURASU

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com