நடிகர் சிம்புவின் போடா போடி படம் விரைவில் ரிலீசாகிறது. அவருக்கு திருமணத்துக்கு பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்று சிம்பு கூறினார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
சமீபத்தில் அமெரிக்க சென்றபோது அங்கு எனது உறவுக்காரரின் குழந்தைகளோடு நேரத்தை செலவழித்தேன். போடா போடி படப்பிடிப்பு அரங்கிலும் குழந்தைகளுடன்தான் இருந்தேன். அவர்களோடு பழகும்போது மனம் லேசாகி விடுகிறது. அதனால்தான் திருமணம் ஆசை வந்து விட்டது.
குழந்தையை என் மனைவி கவனிக்க வேண்டியது இல்லை, நானே பார்த்து கொள்வேன். நடிப்பையும் வீட்டையும் என்னால் பார்த்துக் கொள்ள முடியும் எனது மனைவி எடுபடி வேலை செய்வது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது என்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனது சுக துக்கங்களில் பங்கெடுத்து உற்ற தோழியாக இருந்து உதவி செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
காதல் திருமணமா பெற்றோர் பார்க்கும் திருமணமா என்பது முக்கியம் அல்ல. அறிவு முதிர்ச்சியான பெண்ணை தேடுகிறேன். சுயபுத்தி இருக்க வேண்டும். ரசிகர்கள் மத்தியில் எனது திருமணம் நடக்கும்.
இவ்வாறு சிம்பு கூறினார்.
0 Comments:
Post a Comment