Vaalu will be a comedy entertainer which will be directed by Vijay Chandar. Hansika Motwani, Santhanam, VTV Ganesh are among the other doing prominent roles.
Recently the actresses from more than a decade back are returning back to movies to play the supporting roles. Nadhiya who was a popular actress earlier had acted as a mother in “M Kumaran Son of Mahalakshmi” with Jeyam Ravi, recently Sridevi’s come back movie is English Vinglish. Now it is Mantra to join the list.
Remember Mantra, the bubbly actress who debuted as a heroine in Priyam more than a decade back. The actress went on to star opposite leading heroes. Mantra decided to settle down in life and got married. Mantra is back now in Kollywood.
The actress is ready to give her sizzling performance back with Simbu’s Vaalu. She has been roped to play a very powerful character in the upcoming film of Simbu. The shooting for the movie is currently processing in Prasath Lab. Mantra has great belief that it will be a good come back movie for her.
தமிழ் சினிமா சமீப காலமாக பல மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பழைய கதாநாயகிகள் பலரும் அக்கா, அண்ணி, அம்மா வேடம் என ரீ-என்ட்ரி கொடுக்க ஆரம்பித்து விட்டனர். 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' நதியா, ’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ ஸ்ரீதேவி வரிசையில் மந்த்ராவும் இணைந்திருக்கிறார். கவர்ச்சி, நடிப்பு என அனைத்திலும் வெளுத்து கட்டியவர் மந்த்ரா. அஜித், அருண் விஜய் உட்பட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் என்ற உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். 7 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கோலிவூட்டில் கலக்க வருகிறார் மந்த்ரா. தனது ரீ என்ட்ரியை சிம்புவுடன் தொடங்கி இருக்கிறார் மந்த்ரா. வாலு படத்தில் ஒரு பவர் புல் கேரக்டரில் நடிக்கிறாராம். இதைத் தவிர கதாப்பாத்திரம் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.வாலு படத்தின் ஷூட்டிங் தற்போது பிரசாத் லேபில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாலு படம் தனக்கு ஒரு சிறந்த ரீ என்ட்ரியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மந்த்ரா.