தற்போது சிம்பு, வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஹன்சிகாவுடன் நடித்து வருகிறார், வேட்டை மன்னன் படப்பிடிப்பின்போதுதான் இருவருக்குள்ளும் காதல் உருவானது. இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்த பிறகு இனி அவர்கள் தொடர்ந்து இணைந்து நடிப்பார்களாக என்ற கேள்வி எழுந்தது.
சிம்பு நடிக்க, பசங்க பாண்டிராஜ் நடிக்கும் புதிய படத்தில் ஹன்சிகா நடிப்பதாக கூறப்பட்டது. இதனை சிம்பு மறுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நானும், ஹன்சிகாவும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வருகிறோம். அதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் சமீபத்தில் ஏற்பட்டு விட்டது. இதனால் யாருடைய கேரியரும் பாதிக்கப்படவில்லை. இருவருமே பிசியாக இருப்பதால் திருமணம் செய்து கொள்ளும் நாள் பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஹன்சிகா என்னோடு நடிக்கவில்லை. இது பக்காவான லவ் ஸ்டோரி. தற்போது முன்னணியில் உள்ள மற்ற நடிகைகளிடம் இயக்குனர் பேசி வருகிறார். படத்தின் டைட்டிலும், ஹீரோயினும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
Source : Dinamalar