Regular updates will be back! Sorry for the short break, everyone. Thank you for your patience and support! ❤️ Regular content will resume soon. Stay tuned! 🔥 

With Love
YT Praveen Kanna 
Admin

சிம்பு பாடிய புத்தாண்டு பாடல் - மாலைமலர்

‘மகாபலிபுரம்’ என்ற பெயரில் புது படம் தயாராகிறது. இந்த படத்தை டான்சாண்டி இயக்குகிறார். இவர் பூபதிபாண்டியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதனை சிம்பு பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதினர். இதற்காக சிம்புவிடம் அனுமதி கேட்டனர். அதற்கு சிம்புவும் சம்மதித்தார். ஸ்டூடியோவுக்கு வந்து புத்தாண்டு பாடலை பாடி கொடுத்துவிட்டு சென்றார். யுகபாரதி எழுதிய இப்பாடலுக்கு கே. இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே ‘முகமூடி’, ‘யுத்தம் செய்’ படங்களுக்கு இசையமைத்தவர். 

இந்த படத்தில் விநாயக், ‘சூதுகவ்வும்’ கர்ணா, ரமேஷ் கார்த்திக், வெற்றி, அங்கனாராய், பிருத்திகா போன்றோர் முக்கிய கேரக்டரில் நடிக்கினறனர். காமெடி, திரில்லர் படமாக தயாராகிறது.

Published In MAALAIMALAR Daily Evening Tamil News Paper Dated 1-January-2014


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com