Regular updates will be back! Sorry for the short break, everyone. Thank you for your patience and support! ❤️ Regular content will resume soon. Stay tuned! 🔥 

With Love
YT Praveen Kanna 
Admin

பிரமாண்ட காதல் படமாக உருவாகும் சிம்பு - நயன்தாரா படம்!

ஹன்சிகா, காஜல்அகர்வால் என பல நடிகைகள் மார்க்கெட்டில் இருந்தபோதும் நயன்தாரா என்ட்ரி ஆனதும் இரண்டு படங்களிலேயே மார்க்கெட்டை தன் பக்கம் இழுத்து விட்டார். அதோடு அனாமிகா மூலம் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் இமேஜூம் அவரை ஒட்டிக்கொண்டதால் இப்போது குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து விட்ட நயன், சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருப்பதால், அவரது மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பு அலை வீசத் தொடங்கியிருக்கிறது. 

அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் சேதியறிந்து, படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தவண்ணம் உள்ளதாம். இதனால் ரசிகர்களின் தள்ளுமுள்ளுவில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள செக்யூரிட்டியோடு களத்திற்கு சென்று வருகிறாராம் நயன்தாரா. 

இந்த நிலையில், இன்னும் பெயரிடப்படாத அப்படத்தில் சிம்பு-நயன்தாரா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளாராம் பாண்டிராஜ். அதனால் படத்திற்கு ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை விட இப்போதும் இன்னும் எகிறி நிற்கிறதாம். இதனால் கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் அளவுக்கு இந்த படமும் பிரமாண்ட காதல் படமாகும் என்கிறார்கள்.
-


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com