![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3uCBqAuBNT-yjJQFKpQNKU4fsFItu0Xy-mQ7KyC0iNyphb8vsullOWhaBZrwtj9PsIwAfs9Ys1kTzI7ImhoKALO8Ld82m5sW24F_ViTGxk3TiOgnidvSgebDqXiuQ3Ni7gsH6P7rSmYQ/s1600/yt+-+simbu+and+nayanthara.jpg)
நவம்பரில் 'வாலு' திரைப்படமும், டிசம்பரில் 'இது நம்ம ஆளு' திரைப்படமும் வெளியாகும் என நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.
விஜய் சந்தர் இயக்கத்தில் 'வாலு', நெல்சன் இயக்கத்தில் 'வேட்டை மன்னன்' மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் 'இது நம்ம ஆளு' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
இதில் எந்த ஒரு படமும் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது. 2012 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட படம் 'வாலு'. ஆனால் பல்வேறு காரணங்களால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதே தயாரிப்பாளரின் தயாரிப்பில் தான் 'வேட்டை மன்னன்' படமும் தயாராகி வருகிறது. பாண்டிராஜ் இயக்கிவரும் 'இது நம்ம ஆளு' திரைப்படத்தை சிம்புவே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது படங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்து சிம்பு கூறியிருப்பது,"'வாலு', 'வேட்டை மன்னன்' ஆகிய படங்களுக்கு ஒரே தயாரிப்பாளர். பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு நவம்பரில் 'வாலு' திரைப்படம் வெளியாகும். ஒரு நடிகராக நான் எனது கடமையை முடித்து விட்டேன். என்னுடைய ரசிகர்களைப் போலவே நானும் எனது படம் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கிறேன். 'இது நம்ம ஆளு' படத்தைப் பொறுத்தவரை படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. 'இது நம்ம ஆளு' கண்டிப்பாக டிசம்பரில் வெளியாகும். நவம்பர் மாதம் முதல் எனது படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இப்படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் படத்திலும், அதனைத் தொடர்ந்து சிம்புவே இயக்கி ஒரு படத்திலும் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
- தி இந்து ( தமிழ் )
0 Comments:
Post a Comment