சிம்பு படத்துக்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வரிவிலக்கு

பாண்டிராஜின் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து குறளரசன் இசையமைத்த ‘இது நம்ம ஆளு’ படம் இப்போது தெலுங்கில் ‘சரஸுடு’ என்கிற பெயரில் வரும் செப்-15ல் வெளியாக இருக்கிறது. 

அதற்காக தமிழ்ப்படத்தை அப்படியே மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள் என நினைத்துவிடவேண்டாம். இந்தப்படம் உருவாகும்போதே தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக தயாராகி வந்தது. தமிழில் சூரி நடித்த 40 நிமிடக் காட்சிகள், தெலுங்கில் சத்யம் ராஜேஷ் என்கிற நகைச்சுவை நடிகரை வைத்துப் படமாக்கப்பட்டுள்ளன. 

அதுமட்டுமல்ல, தமிழில் நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்து நடித்த சிம்பு எழுதிய பாடல் ஒன்றை, டி.ராஜேந்தர் சுந்தரத் தெலுங்கில் எழுதியுள்ளார். ‘முன்ன மன்மதா.. நின்ன வல்லபா.. நேனு சரஸுடு” என சிம்புவின் வெற்றிப்படங்களுடைய பெயர்கள் எல்லாம் அந்தப்பாட்டில் இடம்பெறுகின்றனவாம். 

இந்தப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும், தமிழகத்தில் உள்ள சில முக்கிய திரையரங்குகளிலும் தெலுங்கிலேயே வெளியாகிறது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட தெலுங்குப் படமான இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரண்டு மாநில அரசுகளும் ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளன. 

இந்தப்படத்தை முதன்முறையாக ஆந்திரா முழுவதும் தானே வெளியிடுகிறார் டி.ராஜேந்தர்.

இதற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டு வெளியீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் டி.ராஜேந்தர்.

Source : Tamizhvali.com

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com