Vettaimannan Director Exclusive Interview

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை. ஸ்கூலிலிருந்து காலேஜ் படிச்சது வரைக்கும் சினிமா பார்த்த ஞாபகமே எனக்கு இல்லை. நல்லா படிப்பேன். என்னோட கவனமெல்லாம் படிப்பில்தான். எப்படியாவது படிச்சு இன்ஜினீயரா வரணும்னு கனவு கண்ட என்னை, எங்க அப்பா, அடம் பிடிச்சு விஸ்காம் சேர்த்து விட்டார். ஏன்னா, என் அப்பா டாக்குமென்ட்ரி படங்களில் வொர்க் பண்ணியிருக்கார். அவருடைய கனவை என் மூலமா நிறைவேற்றிட்டார். படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி ஏதாவது வேலை செய்யணுங்கிறனால விஜய் டி.வில வேலைக்குச் சேர்ந்தேன். இப்போ இயக்குநராவும் ஆகிட்டேன்...'' என்று உற்சாகமாகப் பேசுகிறார் `கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சன்.


உங்களுடைய `வேட்டை மன்னன்' படத்துக்குப் பிறகு ரெண்டாவது படம் எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்? 

வேட்டை மன்னன்' படம் இடையில் டிராப் ஆனவுடனே ரெண்டு நாள் ரொம்ப ஃபீல் பண்ணினேன். அப்புறம் சரி ஓகேனு என்னை நானே ஆறுதல் படுத்திக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். இதற்கு இடையில் எந்தப் படத்துக்கும் ஸ்க்ரிப்ட் எழுதல. அதுமட்டுமல்லாம `வேட்டை மன்னன்' சமயத்துல டிஜிட்டல் வளர்ச்சி இந்தளவுக்கு இல்லை. ஆனா, இப்போ நமக்குப் போட்டியா நிறைய பேர் இருக்காங்க. அவங்க எல்லாரையும் பீட் பண்ணி முன்னாடி வரமாதிரியான ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணணும். அப்படி ரெடி பண்ணுனதுதான் இந்தப் படம். நயன்தாராகிட்ட கதை சொல்றதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் `கோலமாவு கோகிலா' படத்தோட கதை எழுதுனேன். சுடச் சுட எழுதி இயக்கி முடிச்சிட்டேன்.


வேட்டை மன்னன்' படத்தைத் திரும்பவும் இயக்கிக் கொண்டுவர ஐடியா இருக்கா? 

தயாரிப்பாளர், ஹீரோவுக்கு விருப்பம் இருந்தா பண்ணலாம். அதுவுமே, படத்தோட கதையை ரீ ரைட் பண்ணி இன்னைக்கு இருக்கிற ட்ரெண்ட்டுக்கு ஏத்தமாதிரி வொர்க் பண்ணி செய்யணும். பார்ப்போம்.


வேட்டை மன்னன்' படத்துல சிவகார்த்திகேயன் நடிச்சிருக்காராமே? 

அவர் நடிகரா ஆகுறதுக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. சிவகார்த்திகேயன் விஜய் டி.வியில இருந்ததால நல்ல அறிமுகம். இந்தப் படத்தோட ஸ்க்ரிப்ட் வொர்க் போகும்போதும் கூடவே இருந்தார். ஒரு சின்ன ரோல் படத்துல இருந்துச்சு. `நானே பண்றேன்’னு அவரே நடிச்சிட்டார். அதே மாதிரி `எனக்குக் கல்யாண வயசு' பாட்டு ரெடி பண்ணும் போதும் சிவா எழுதுனா நல்லாயிருக்கும்னு அனிருத் ஃபீல் பண்ணுனார். அவர்கிட்ட சொன்னவுடனே, `என்னை வெச்சு காமெடி எதுவும் பண்ணலேயே'னு கேட்டுட்டு ஒரு ரெண்டு நாள் டைம் எடுத்து எழுதிக் கொடுத்துட்டார். கண்டிப்பா, இது எங்க டீம் தவிர வேற யாருக்காவும் சிவா பண்ணியிருப்பாரானு தெரியல.


ஜோடி நம்பர் 1   நிகழ்ச்சியில் சிம்பு, பிருத்விராஜ் இடையில் நடந்த சண்டை நீங்க எழுதி கொடுத்த ஸ்க்ரிப்ட்னு கேள்விப்பட்டோமே? 

சிம்பு இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே என்னாலதான். அவரும் நானும் ஸ்கூலிலிருந்து நண்பர்கள். இப்படியொரு நிகழ்ச்சி இருக்கு வரமுடியுமானு கேட்டவுடனே, ஓகே சொன்னார். மற்றப்படி நிகழ்ச்சியில் ஸ்க்ரிப்ட்படியெல்லாம் சண்டை நடக்கல. அது அன்னைக்கு இருந்த சூழ்நிலையில எதார்த்தமா நடந்த ஒண்ணுதான்

Source : Vikatan

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com