-YT EXCLUSIVE-
T.RAJENDAR WINS OVER ARULPATHI IN THE
CHENNAI KANCHIPURAM THIRUVALLUR DISTRICT FILM DISTRIBUTORS ASSOCIATION
ELECTION.AND HE WILL BE SERVING AS THE PRESIDENT FOR THE FORTHCOMING TWO-YEAR
TERM.
சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் அண்ணா சாலையில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அருள்பதி அவர்கள் தலைவராக பதவி வகித்தார். தற்போது 532 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணை செயலாளர், பொருளாளர், 16 கமிட்டி உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு, டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், விநியோகிஸ்தர் அருள்பதி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.
இதில் தேர்தல் அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா முன்னிலையில், காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5மணி வரை நடைபெற்றது.
நேற்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டது இதில் டி.ராஜேந்தர் அணி வெற்றிபெற்றுள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் மொத்தம் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தலைவர் பதவியில் அருள்பதி அவர்கள் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment