பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா பிரபல இன்று மதுரையில் காலமானார். இவர் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
'தூள்' படத்தில் பரவை முனியம்மா பாடிய 'மதுர வீரன்தானே' பாடல் பெரிய வெற்றி பெற்றது. 2003 உலகக்கோப்பையில் சச்சின் விளையாடிய வீடியோ ட்ரிபியூட் இவர் பாடிய மதுரைவீரன் தானே பாடலை சேர்த்து ரிலீஸ் செய்திருந்தனர் இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. பின்னர் பல படங்களில் நடித்தும் பாடியும் பிரபலமானார்.
சிம்பு நடித்த கோவில் படத்தில் இடம் பெற்ற “காதல் பண்ண திமிரு இருக்க?” என்ற பாடலை இவர் தான் பாடிருந்தார் என்று பலரும் நினைத்திருந்தனர் அனால் இந்த பாட்டில் நடித்து மட்டுமே இருந்தார் ,இந்த பாடலை கோவை கமலா பாடிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment