"வாலு" படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் பிறந்தநாள் இன்று.


வாலு, ஸ்கெட்ச் மற்றும் சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் பிறந்தநாள் இன்று. 


விஜய் சந்தர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் வாலு படத்தினை இயக்கியதன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். சிம்பு மற்றும் விஜய் சந்தர் இருவரும் இதற்கு முன்பு இணைந்த வாலு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். வாலு படத்திற்கு பிறகு விஜய் சந்தர் ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கினார். ஸ்கெட்ச் படத்தில் விக்ரம் ஹீரோவாகவும், சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் நடித்திருந்தனர். 

தனது முதல் படமான வாலு படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது தனது இரண்டு ஆண்டுகள் பிறந்த நாட்களை ஷூட்டிங் ஸ்பாட்டில்  கொண்டாடினர்.  அதனது புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.



தற்போது சிம்புவுடன் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இயக்குனர் விஜய் சந்தர் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். 


நிறையப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களுடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com