"மாநாடு" மனிதருக்கு பிறந்த நாள்

 

என் அலுவல் ரீதியாக நான் சென்னை சென்றிருந்த நாள்.. அன்று தான் மாநாடு ஷூட்டிங் ஆரம்பமானது. 

சூட்டிங் ஸ்பாட்டுக்கு மிக அருகில் தான் இருக்கின்றேன் என்பதை ஹரி அண்ணா அலைபேசியில் என்னிடம் கூறினார், இது போதும்-ல.. அண்ணன் சிலம்பரசனை பார்க்காமல் வந்துவிடுவோமா என்ன..? நேரடியாக சென்றேன் படப்பிடிப்பு தளத்திற்கு, அங்கு முக்கியமான காட்சிகளை படமாக்கி கொண்டிருந்தனர், தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தேன் . அந்த நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் மாதிரி இல்லாம, அனைவருடனும் அன்புடனும் அரவணைப்புடன் பேசிக்கொண்டிருந்தார் அண்ணன் சுரேஷ் காமாட்சி அவர்கள், என்னிடமும் பேசினார், அவரது முகத்தில் ஒரு அலாதியான பிரகாசம் அதில் நமக்கும் கொஞ்சம் ஒளியூட்டினார், சத்தியமாக சொல்கிறேன் அவர் தயாரிப்பாளர் மாதிரி தெரியவில்லை.. பல நாள் கழித்து சந்தித்த அண்ணன் போல அவ்வளவு அன்பை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். இன்று பிறந்தநாள் என்றதும் எனக்கு இதை உங்களிடம் ஷேர் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் . இப்படிபட்ட நல்ல மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதில் சந்தோஷப்படுகிறேன். 


இப்போ தான் தலைவன் entry, ஷூட்டிங் முடிந்து சிம்பு அண்ணன் நடந்து வரும்போதே என்னை பார்த்ததும், "வாங்க Mr.Praveen" என்று சொல்லிக்கொண்டே, என் அருகில் வந்தார்.. பல நாட்கள் கழித்து சந்தித்த சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை. ஐந்துநிமிடம் பேசிவிட்டு சென்றார், இன்னமும் அந்த 5 நிமிடங்கள் நீண்டு கொண்டே இருக்கிறது, நீங்கா நினைவுகளாய். 

அன்புடன் 
 Yt பிரவீன் கண்ணா 

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com