கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ முதலில் நதிகளில் நீராடும் சூரியன் என்று பெயரிடப்பட்டிருந்த படம் தான். அந்தக்கதை மென்மையான நகர்ப்புறக் காதல் கதை. அதுவும் பின்னர் படமாகவே வாய்ப்பு.
சிலம்பரசன் இப்போது உடல்மெலிந்து, மென்மீசையுடன் மிக இளைஞராக, கிட்டத்தட்ட சிறுவன் போல இருக்கிறார். அவருக்கு பொருந்தும் கதை என்பதனால் இந்தக்கதை தெரிவுசெய்யப்பட்டது.
அவருக்காக கதை உருவாக்கப்படவில்லை, கதைக்காக அவரே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
அசுரன் அல்லது கர்ணன் போன்ற கிராமப்புறக் கதை அல்ல இது. கிராமப்புறமும் உண்டு. பரபரப்பான, ஆனால் மிகையான சாகசங்கள் ஏதும் இல்லாத நம்பகமான சினிமா.
வேறு படங்களின் சாயல் ஏதும் இல்லாதது. கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்டைலான படமாக்கல் உடையது. ஆனால் rustic என்று சொல்ல்லப்படும் கரடுமுரடான அழகியல் கொண்டது.
இந்தப்படங்களில் என் பணி முடிந்தபின்னரே படங்கள் ஆரம்பிக்கின்றன. நான் கௌதம் வாசுதேவ் மேனனின் அடுத்தபடம், வசந்தபாலனின் அடுத்த திட்டம் என முன்னகர்ந்துவிட்டேன்.
Source : www.jeyamohan.in
0 Comments:
Post a Comment