5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சிம்பு திரைப்படத்தின் பாடல்


சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி கவனம் பெற்றது. 

இந்நிலையில், இந்த பாடல் தற்போது 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
-தினத்தந்தி

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com