சிம்பு ஒரு பேட்டியில் கருணாநிதி குறித்து நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை தெரிவித்துள்ளார். “கலைஞர் கருணாநிதியை நான் தாத்தா என்று தான் அழைப்பேன். அவருக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு உண்டு. எனது வேலையில் சந்தேகம் இருந்தால் அவரிடம் தான் கேட்பேன்.
நான் வல்லவன் படம் இயக்கிக் கொண்டிருந்தேன்.
அப்போது, படத்தை முடித்ததும் எனக்கு போட்டுக் காட்டும்படி அவர் கூறினார். ஆனால், சில காரணங்களால் என்னால் படத்தை போட்டுக்காட்ட முடியவில்லை. அதன்பிறகு, குடும்ப விழா ஒன்றில் கருணாநிதி தாத்தாவை நேரில் சந்திக்க நேர்ந்தது. அப்போது என்னை பார்த்த கருணாநிதி கண்ணத்தில் பளார் என்று அறைந்தார். பின்னர், எனக்கு ஏன் படத்தை போட்டுக்காட்டவில்லை ?.
அடுத்த படத்தை போட்டுக்காட்டவில்லை என்றால் மற்றொரு கண்ணத்திலும் அறை விழும் என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டார்” என்றார் உருக்கத்துடன்.
0 Comments:
Post a Comment