டி.ராஜேந்தர் சங்கத்துக்காக சிலம்பரசன் எடுத்த திடீர் முடிவு

தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை உருவாக்கி இருக்கும் டி.ராஜேந்தருக்காக நடிகர் சிலம்பரசன் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். 

கொரோனா ஊரடங்கில் தனது உடல் எடையை முழுவதுமாகக் குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறிய சிலம்பரசன், சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார். அடுத்ததாக வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோல்வியடைந்த டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட உள்ளது. டி.ஆர் தொடங்கி உள்ள சங்கத்துக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சங்கத்தை பதிவு செய்ய விண்ணப்பித்ததற்கான ஆதாரமும் வெளியாகி உள்ளது. வரும் 5ந்தேதி சங்கம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர். டி.ராஜேந்தர், ஜே.சதீஷ் குமார், சிங்காரவடிவேலன், சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் இந்த சங்கத்தின் நிர்வாகிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சங்க நலனுக்காக சிலம்பரசன் சம்பளமே இல்லாமல் ஒரு படத்தில் நடித்து கொடுக்க இருப்பதாக தகவல் பரவுகிறது.

PUBLISHED IN MAALAIMALAR DAILY TAMIL EVENING NEWS PAPER DATED 3/12/2020



0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com