“என்மேல உண்மையான அன்பு வச்சிருக்கிறவர் சிம்பு!”


`நான் சினிமாவுக்கு வந்ததுக்கு காரணமே சிம்பு சார்தான். அவர் இல்லைன்னா நான் இன்னைக்கு சினிமாவில் இருந்திருப்பேனான்னு தெரியலை. டி.வி-யில இருக்கும்போது அவர்தான் முதன்முதலா ‘மன்மதன்’ படத்துல ஒரு பெரிய கேரக்டர் கொடுத்தார். ஏற்கெனவே அந்தப் படத்தில் கவுண்டமணி சார் நடிச்சிட்டிருந்தாலும், எனக்கும் அதில் காமெடி கேரக்டர் கொடுத்தார். ஃபர்ஸ்ட் டைம் ஒரு பெரிய ஹீரோகூட நடிக்கும்போது ரொம்பப் பதற்றமாக இருந்துச்சு. அவர்தான் என்னை கூலா இருக்க வெச்சு ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டார். 


அந்தச் சமயத்தில் சிம்பு சார் எஸ்.ஜே.சூர்யா சார்கிட்ட சொல்லி என்னை ‘அன்பே ஆருயிரே’ படத்திலும் நடிக்க வெச்சார். அதிலும் எனக்கு நல்ல பெயர் கிடைச்சது. தொடர்ந்து `வல்லவன்’, ‘காளை’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’, ‘ஒஸ்தி’, ‘வாலு’ன்னு அவரோட பல படங்களில் நடிச்சேன். குறிப்பா ‘வானம்’ பட சமயத்தில் என்னால கால்ஷீட்டே கொடுக்க முடியலை. அந்த அளவு பிஸியா இருந்தேன். அப்போதும் சிம்பு சார் எனக்காக நான் ஃப்ரீயா இருக்கிற 2 மணி நேரம் மட்டும் நைட் ஷூட் வச்சு எடுத்தார். அந்த அளவுக்கு அவர் படத்தில் நான் இருக்கணும்னு நினைப்பார். நான் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்பறமும், `நீ எங்ககூட மட்டுமாச்சும் சேர்ந்து நடிக்கலாம்ல. நீ ஏன் மொத்தமா இப்படி ஒரு முடிவு எடுத்த'ன்னு கேட்பார். 


சமீபமா மீட் பண்ணியபோதும் இதைப் பத்திப் பேசினோம். ‘இனிமேல் சேர்ந்து நடிக்கலாம் சார்'னு சொன்னேன். என் மேல உண்மையான அன்பு, நட்பு வச்சிருக்கிற ஒரு மனிதர் சிம்பு சார். சந்தானம்ங்கிற என் பெயரைச் சுருக்கி `சான்டா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சதே சிம்பு சார்தான். இப்போ பலர் என்னை ‘சான்டா’ன்னுதான் கூப்பிடுறாங்க. குறிப்பா வெளி மாநிலங்கள்ல இருந்து வர்ற ஹீரோயின்களுக்கு ‘சான்டா’ங்கிற பெயர்தான் ஈசியா கூப்பிடுற மாதிரி இருக்கு.


PUBLISHED IN ANANDHA VIKATAN TAMIL MAGAZINE DATED 02/08/2023

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com